பரிமாணத்தின் விந்தை! இடி தாக்கும் மரமல்ல – இடி தாங்கும் மரம்!

Viduthalai

இடி-மின்னல் தாக்குவது, மரங்களுக்கு உடனடி மரண தண்டனை போன்றது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பமண்டலப் பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் இடி விழுந்து சாம்பலாகின்றன. ஆனால், பனாமாவில் உள்ள சிலவகை மரங்கள், வானிலுள்ள மழை மேகங்களுடன் ஒரு வித்தியாசமான உறவை உருவாக்கியுள்ளன. சிலவகை மரங்கள், இடி, மின்னலை கொலையாளிகளாக அல்லாமல், நட்பு சக்திகளாகப் பயன்படுத்துகின்றன என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி.

விஞ்ஞானிகள் அண்மையில் இனங்கண்டுள்ள இந்த புதிய வகை மரங்கள், உயர் இடி கொண்டுவரும் உயர் மின்னழுத்த அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன. இடிகள் செலுத்தும் மின்சாரத்தை பெற்றுக்கொண்டு, சிறப்பு திசுக்கள் மூலம், பூமிக்கு கடத்திவிடுகின்றன இந்த மரங்கள்.

இன்னும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இடி தாக்குதல்கள், மரப்பட்டைகளில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிளவுகள் மரங்கள் வேகமாக திசுக்களை, பட்டைகளை புதுப்பித்துக்கொள்ளத் துாண்டுகின்றன.

மேலும், இடியால் செறிவடைந்த கனிமச்சத்து நிறைந்த நிலத்தடி நீரை மிகவும் திறமையாக உறிஞ்சவும் இந்த மரங்களால் முடிகிறது. அழிவு சக்தியாக கருதப்பட்ட இடியை, இந்த மரங்கள் ஆக்க சக்தியாக பயன்படுத்துவது, பரிணாமத்தின் விந்தையாகவே தாவரவியல் விஞ்ஞானிகள் பார்க்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *