காவடி யாத்திரையில் கஞ்சா குடி!
பள்ளிகளுக்கு மூன்று வாரம் விடுமுறை
பள்ளிகளுக்கு மூன்று வாரம் விடுமுறை
உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் காவடி யாத்திரையை எவ்வித இடையூறு இன்றி நடத்துவதற்காகவும், மாணவர்களும் கலந்துகொள்ளும் வகையிலும், ஜூலை 16 முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என முசாபர்நகர் மாவட்ட நிர்வாகம் அண்மையில் அறிவித்ததுள்ளது.
முதலில் முசாபர்நகர் மாவட்ட ஆட்சியர் உமேஷ் மிஸ்ரா, ‘‘இந்த முடிவு காவடியாத்திரை எவ்வித இடையூறும் இன்றி சுமூகமாக நடக்கவும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களும் காவடி யாத்திரையில் பங்கெடுக்கும் வகையிலும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் முதல் வாரம் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் திறந்திருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மிஸ்ரா எச்சரித்தார்.
காவடி யாத்திரையின் போது, ஏராளமானவர்கள் கங்கை யிலிருந்து நீரை எடுத்து, ஊரில் உள்ள சிவன் கோயில்களில் ஊற்றுவர். இதனால், முசாபர் நகர் உள்ளிட்ட மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் நடமாட் டமும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இதர மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களும் மீரட் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
காவடி யாத்திரை செல்லும் போது ‘சிவனின் பிரசாதம்’ என்ற பெயரில் கஞ்சா புகைக்கும் சிறுவர்கள்
காவடி எடுத்துச்சென்ற பள்ளி மாணவி கஞ்சா போதையை புகைக்கும் காட்சி! சிவனின் ஆசிபெற்ற பிரசாதம் என்ற பெயரில் இந்த இழிச்செயலை அரசே அனுமதிக்கிறது
வாரணாசியில் உள்ள சிவன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிசிடிவி திரையில் தெரியும் சிவ லிங்கத்தின் மீது அரித்துவாரில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரை ஊற்றும் சிவ பக்தர்கள்
மதப் பண்டிகைப் பெயரால்
உ.பி. பிஜேபி ஆட்சியில் ரணகளம்!
உ.பி. பிஜேபி ஆட்சியில் ரணகளம்!
காவடி யாத்திரை செய்பவர்களின் மீது 8 கோடி செலவில் ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவுகிறது உத்தரப் பிரதேச அரசு
காவடி யாத்திரை செல்லும் ஹிந்துத்துவக் கூட்டம், இஸ்லாமியர் ஒருவர் நடத்தும்
அலைபேசிக் கடையை அடித்து நொறுக்கி மொபைல் போன்களையும் இதர உபகரனஙக்ளையும் அள்ளிச் செல்கிறது காவல்துறை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது
காவடி யாத்திரை களைப்பில்
மதுக்கடையில் சிவபக்தர்கள்
சாலையில் செல்லும் போது ஹாரன் அடித்த சொகுசுப் பேருந்தை அடித்து உடைத்த ஆன்மீக யாத்திரை செல்லும் ஹிந்துத்துவ குண்டர்கள்