இந்தியாவின் மேனாள் பிரதமரும், சமூகநீதிக் காவலருமான மறைந்த வி.பி.சிங் அவர்களது துணைவியார் திருமதி.சீதாகுமாரி அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வருகை தந்தார். அவரை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தும் புத்தகங்களை வழங்கியும், வி.பி.சிங் உடனான தொடர்புகளைப்பற்றி நினைவுகூர்ந்து சிறிதுநேரம் உரையாடி மகிழ்ந்தனர். டில்லி பெரியார் மய்யம்பற்றி அதிகம் அம்மையார் விசாரித்து மகிழ்ந்தார்.. அவருடன் வருகை தந்த வி.பி.சிங்கின் பெயர்த்தி ரிச்சா மஞ்சரி சிங் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, வி.பி.சிங் அவர்கள் எழுதிய கவிதை (தமிழ்) நூலை வழங்கினார் (சென்னை, 27.11.2023).
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் சந்திப்பு!
Leave a Comment
