குரூப்-2 பணியிடங்களுக்கு ஆக. 13ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ப்பிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Viduthalai

சென்னை, ஜூலை 16-
645 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து உள்ளது.

குரூப்-2, 2ஏ பணி இடங்கள்

உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் 8 ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ் நிலை செயலிட எழுத் தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு www.tnpscexams. in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்டு 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது.

தேர்வு திட்டம் மாற்றம்

முதல் நிலைத் தேர்வை பொறுத்தவரையில் 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை வினாக்களாக கேட்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

தேர்வர்களின் நலன் கருதி, குரூப்-2ஏ பணிகளுக்கான தேர்வு திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகவும், 2018 முதல் 2025 வரை 8 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதாவது 2024, 2025-ம் ஆண்டுகளில் குரூப்-2, 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *