கடலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன?

Viduthalai

கடலூர், ஜூலை16- கடலூர் மாவட்ட பொது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:–

கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட் டங்களில் பல்வேறுஅரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (14.7.2025) இரயில் மார்க்கமாக சிதம்பரம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (15.7.2025) காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாளை யொட்டி, அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிதம்பரத்தில், “உங்களுடன் ஸ்டா லின்” என்ற புதிய திட்டத்திற்கான முகா மினை தொடங்கி வைத்து, சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் கட்டப்பட்டுள்ள அய்யா எல். இளையபெருமாள் அவர்களின் உருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

இந்தப் பயணத்தின் போது கடலூர் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அவற்றை உடனடியாக நிறைவேற்றி கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

  1. சிதம்பரம் நகரத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான் சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி, புதிய இணைப்புச் சாலை ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக் கப்படும்.
  2. வட மாவட்டங்களில் உள்ள அனைத்து பழங் குடியினரும் பயன்பெறும் வகையில், கடலூர் வட்டத்தில் உள்ள அரிசி பெரியான்குப்பத்தில், புதிய உண்டு உறைவிட பழங் குடியினர் பள்ளி ஒன்று தொடங்கப்படும்.
  3. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள சிறீ முஷ்ணம் வட்டம், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், சிறீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்.
  4. வீராணம் ஏரிப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சோழதரத்தில் இருந்து இராஜமதகு வரை படகுச்சவாரி மேற் கொள்ளவும், சுற்றுலா பயணிகளுக்கான வசதி களை அமைத்திடவும், 10 கோடி ரூபாய் செல வில் ஏரி தூர்வாரும் பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
  5. சட்டமன்ற உறுப் பினர் சிந்தனைச் செல்வன் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகை யில், கூடுவெளி சாவடி யில் புதிய திறன் மேம் பாட்டு நிலையமும் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அவர் களால் அறிவிப்பு வெளி யிடப்பட்டது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *