துறவிகள் போல வேடமிட்டு பொதுமக்களை ஏமாற்றிய 82 பேர் கைது

Viduthalai

டேராடூன், ஜூலை 16- உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சில கோவில்களுக்கு பக்தர்கள் சாரி தாம யாத்திரை மற்றும் கன்வர் யாத்திரை சென்று வருகின்றனர்.

இதைப் பயன்படுத்தி சிலர் துறவிகள் போல வேடமிட்டு பக்தர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.

மதத்தின் போர்வையில் மக்களின் பொது நம்பிக்கையை சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் புஷ்கர் சிங் நாமி அறிவுறுத்தலின் போல் வேடதாரிகளைக் கண்டுபிடிக்க ‘ஆப்ரேஷன் கலெனேமி’ என்ற பெயரில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் பொருட்டு சாதுக்கள் மற்றும் துறவிகள் வேடத்தில் நடமாடி பக்தர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றிய 82 பேரை கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாகள் தெரிவித்தனர்.

கருநாடகாவில்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்

துணை முதலமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு, ஜூலை 16-  கருநாடகா காங்கிரஸ் அரசு, பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயணத் திட்டத்தைப் போலவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

‘சக்தி’ என்ற பெயரில் ஏற்கெனவே மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது, இது பெண்களின் முன்னேற்றத்தை மய்யமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இதேபோன்ற சலுகையை விரிவுபடுத்தும் வகையில் புதிய திட்டத்தை துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். இந்த அறிவிப்பு, கல்வியை ஊக்குவிக்கவும், மாணவர்களின் பயணச் செலவை குறைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது கருநாடகாவில் 308 அரசுக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன, அங்கு கன்னடம் மற்றும் ஆங்கில வழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி ஆண் மாணவர்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம் என்று டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *