அய்தராபாத், நவ.28 தெலங்கானா வில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங் கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போங்கீர் பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியது, ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து ஆட்சியை நடத்துவார்கள், நிலம், மது, மாஃபியா ஆகிய அனைத்தும் மாநிலத்தில் கொடிக் கட்டி பறக்கும் அதேசமயம் வேலை வாய்ப்பு இருக்காது என்றார். காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், நவம்பர் 30ஆம் தேதி நடை பெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்த லுக்காக கட்சி அறிவித்த வாக்குறுதி களையும் அவர் பட்டிய லிட்டார். தெலங்கானாவின் ஏழைகள் ஏழை களாவே உள்ளனர். ஆனால் பிஆர்எஸ் கட்சி மேலும் பணக்காரர்களாகி வருகிறது. பாஜகவாக இருந்தாலும் சரி, பிஆர்எஸ் கட்சியாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்துகொண்டு பணக் காரர்களாக மாறுவதே அவர்களின் கொள்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தெலங் கானா மாநிலம் உருவாக்கப்பட்ட தில் இருந்தே, ஆளும் பிஆர்எஸ் கட்சித் தலைவர்களிடம் மட்டுமே பணம் குவிந்து வருகிறது. அவர் களுக்கு ஆதரவான தொழிலதி பர்களாக மட்டுமே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட வில்லை. மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். நடுத்தர மக்கள், சிறு தொழில் புரிவோர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட் டுள்ளனர். தெலங்கானா மக்கள் விற் பனைக்கு இல்லை என்பதை அவர் களுக்கு கற்பிக்க வேண்டும். தெலங் கானா மக்களின் “கனவுகள்” தகர்க்கப் பட்டுவிட்டதாகக் கூறிய அவர், காலேஸ்வரம் பாசனத் திட்டம் உள்பட எந்தத் திட்டமும் முழுமையாக முடிக் கப்படாத நிலையில் உள்ளதாகவும், ஒவ்வொரு கட்டத்திலும் ஊழல் இருப்பதாக அவர் கூறினார். பிஆர்எஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் நோக்கமும் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதும், அதன் மூலம் பணத்தைக் குவிப்பதும்தான். தேர்தல் வரும்போது மட்டும் அவர்கள் மக்களிடம் பல்வேறு பொய்களைக் கூறி வாக்குக் கேட்பார்கள். அவர் களுக்கு தெலங்கானா மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாநில மக்கள் அனைவரது வாழ் வும் சிறக்கும் வகையில் நல்லாட்சி வழங்கப்படும்.
தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகிய மூன்றுமே ஒரே அணியைச் சேர்ந்தவைதான். காங் கிரஸ் மட்டுமே அவர்களை எதிர்த்து மக்களுக்காகப் போராடும் கட்சியாக உள்ளது என்றார் பிரியங்கா.