வங்கி பணியாளர் தேர்வாணையம் (அய்பிபிஎஸ்) மூலம் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராட்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா என நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 2026 – 2027ஆம் ஆண்டிற்கான அய்டி அலுவலர், வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அலுவலர், சட்ட அலுவலர், மனிதவளம்,பணியாளர் அலுவலர், சந்தைப்படுத்தல் அலுவலர் என 1,007 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகின்றன. முதன்மைத் தோ்வு அக்டோர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதற்கு, தகுதியான வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இருபாலர்களிடம் இருந்து இணைய வழி மூலம் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து விவரம்:
பணி: IT Officer (Scale I), Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/Personnel Officer (Scale I), Marketing Officer (Scale I)
மொத்த காலியிடங்கள்: 1,007
ஊதியம்: மாதம் ரூ.48,480 – 85,920
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதியில் 65 சதவிகிதத்துக்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21.7.2025 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.