5 மாத அகழாய்விலே சரஸ்வதி நதியாம்! – ஆனால் கீழடி?

Viduthalai

10 குழிகள் மட்டுமே தோண்டி, அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டதாக பாஜக அரசு தெரிவிப்பதாக   நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள பஹஜ்ஜில் வெறும் 5 மாத அகழாய்வில் சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டனர் என்றும், ஆனால் கீழடியில் 102 குழிகள் தோண்டி,
88 கார்பன் மாதிரிகளை கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தால் ஆதாரம் போதவில்லை என்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

வருகிறது ‘ரோஹித் வெமுலா சட்டம்’

கருநாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கும் நோக்கில், ‘ரோஹித் வெமுலா சட்டம் 2025′-அய் கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மாணவர்கள் மீது சமூக, பொருளாதார, ஜாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இச்சட்டம் குற்றமாக்குகிறது. முதல்முறை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தமிழ்நாட்டுக்கும் இதுபோன்ற சட்டம் தேவையா? இல்லையா?

முதுகலைப் படிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கு ஜூன் 20 அன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், ஜூலை 31 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக.,4-இல் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். கலந்தாய்வுக்குப் பின்னர் ஆக., 20-இல் வகுப்புகள் தொடங்கும்.

இல்லாத குறளை பரப்பிய
ஆளுநர் மாளிகை

தமிழறிஞர்கள் கண்டனம்

மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சிறந்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அச்சான்றிதழில் ‘செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு, மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு’ என எழுதப்பட்டு அதற்கு கீழே திருவள்ளுவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது திருக்குறளே கிடையாது என கூறும் தமிழறிஞர்கள், இது திருக்குறளுக்கும், வள்ளுவருக்கும் நடந்த அவமானம் என வருந்துகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *