கேள்வி: பொதிகை சேனலின் பெயரை ‘டிடி தமிழ்’ என மாற்றுவதால் எல்லாம் மாறிவிடுமா?
ஒன்றிய இணையமைச்சர் முருகன் பதில்: பெயர் மாற்றத்தை மட்டும் நான் கூறவில்லை. அந்தந்த மொழிகளின் பெயரையே வைக்க முடிவெடுத்ததால் ”டிடி தமிழ்’ என மாறியிருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம், திறன்மிக்க ஊடகவியலாளர்கள், நடுநிலையான அரசியல் விவாத நிகழ்ச்சிகள் என, தனியார் சேனல்களுக்கு சவால் விடும் வகையில் சேனலை இனி நீங்கள் பார்க்கலாம்.
(‘தினமலர்’, 26.11.2023, பக்கம் 10)
நமது பதிலடி: ”பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை” என்று கேட்பதுபோல் இருக்கிறது ஒன்றிய இணையமைச்சரின் பதில்.
அந்தந்த மாநில மொழிகளின் பெயரையே வைக்க முடிவெடுத்ததாகக் கூறியிருக்கிறார்.
அப்படியென்றால், ”பொதிகை – தமிழ்” என்று பெயர் சூட்டியிருக்கலாமே!
டிடி (தூர்தர்ஷன்) என்று மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டுமா?
‘ஆகாஷ்வாணி’ என்று ஒலிபரப்பியதை எதிர்த்துப் போராடி, அகில இந்திய வானொலி என்று மாற்றப்பட்டது.
இப்பொழுது தூர்தர்ஷனைத் திணித்தது ஏன்? ஏன்??
மீண்டும் போராட்டம் வெடிக்க வேண்டுமா?