வெட்டிக்காடு, ஜூலை15- 2025-2026ஆம் கல்வி ஆண் டிற்கான அரசு நடத்திய குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 10.07.2025 அன்று தொடங்கியது.
இதில் முதற்கட்டமாக பல்வேறு வகையான தடகளப் போட்டிகள் பட்டுக்கோட்டை கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வெட்டிக்காடு பெரியார் மெட்ரி குலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் 23 பேர் பங்கு பெற்று 1 முதல் பரிசு, 3-இரண்டாம் பரிசு, 4-மூன்றாம் பரிசு மொத்தம் 8 பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற 4 மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர.
பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர் பெரு மக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பாராட்டி மகிழ்ந்தனர்.