கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 15.7.2025

Viduthalai

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*ஆர்.எஸ்.எஸ்.சின் 75 வயது ஓய்வு திட்டம்; ம.பி. பாஜக எம்.எல்.ஏக்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதாம். இப்போதே கிலி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் நிதிஷ் ஆட்சியின் ‘காட்டு தர்பார்’, தண்ணீரை விட மதுபானம் எளிதாகக் கிடைக்கிறது! காங்கிரஸ் குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகள் சித்தாந்தக் கண்ணிவெடிகள் அவற்றை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது: ஆர்எஸ்எஸ்-இணைக்கப்பட்ட வார இதழில் கட்டுரை

தி இந்து:

* ஒடிசா பாஜக ஆட்சியில், கல்லூரி மாணவி தீக்குளிப்பு; 14 நாட்களுக்குப் பிறகே கைது நடவடிக்கை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட். படித்து வந்த மாணவி ஒருவரை பேராசிரியர் சமீரா குமார் சாகு பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் புகார் அளித்து 11 நாட்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை கல்லூரி வளாகத்திலேயே மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். ஒடிசா கல்லூரி மாணவியை குடியரசுத் தலைவர் முர்மு விசாரித்து, தாயாரைச் சந்தித்தார்.

* உ.பி. பாஜக ஆட்சியில் 5000 பள்ளிகள் மூடல்: 50 மாணவர்களுக்குக் குறைவாக படிக்கும் பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பு. எளிய மக்களுக்குக் கல்வி மறுக்கும் செயல் என காங்கிரஸ் கண்டனம்.

* அகில இந்திய காங்கிரஸ் குழுவின் (ஏஅய்சிசி) இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் இன்று பெங்களூரில் தொடங்கும். 24 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் கருநாடக முலமைச்சர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), வி. நாராயணசாமி (புதுச்சேரி), எம். வீரப்ப மொய்லி, எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர்.

தி டெலிகிராப்:

* திருப்பித் திருப்பிச் சொல்கிறார் டிரம்ப்: இந்தியா-பாகிஸ்தான் போரை வர்த்தக ராஜதந்திரம் மூலம் தடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறுகிறார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* உ.பி. பாஜக டபுள் என்ஜின் ஆட்சி: “யோகி அரசாங்கம் குழந்தைகளிடமிருந்து புத்தகங்களைப் பிடுங்கி அவர்களுக்கு மது பாட்டில்களை கொடுக்கிறது”, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் காட்டம்.

 – குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *