சென்னை, ஜூலை 15 தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை பொதுமக்களுக்கு துல்லியமாகவும், உரிய நேரத்தில் எடுத்துரைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி (அய்ஏஎஸ்) அதிகாரிகளை நியமித்துள்ளார். டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், மற்றும் பெ. அமுதா ஆகியோர் இதில் அடங்குவர்.
நியமிக்கப்பட்ட செய்தித் தொடர் பாளர்கள் மற்றும் அவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்:
- டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்)
துறைகள்: எரிசக்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, போக்குவரத்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், மனிதவள மேலாண்மை.
- ககன்தீப் சிங் பேடி (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை)
துறைகள்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், வேளாண்மை, நீர்வளம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், இயற்கை வளங்கள்.
- தீரஜ் குமார் (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
துறைகள்: உள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
- பெ. அமுதா (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை)
துறைகள்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, மாற்றுத் திறனாளிகள் நலம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையம், சிறப்புத் திட்டச் செயலாக்கம்.
இந்த செய்தித் தொடர்பாளர்கள், தங்கள் துறைகளின் செயலாளர் களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து, தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் செய்தி ஊடகங் களை சந்தித்து தகவல்களை துல்லியமாக வெளியிடுவார்கள். அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை விரைவாகவும் சரியாகவும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது இவர்களின் முதன்மை பொறுப்பாகும்.