சென்னை, ஜூலை 15 தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லத்தீன் அமெரிக்க நாடுகளாக தென் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பின் வர்த்தக தலைமை அலுவலகத்தை சென்னையில் திறக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் 2024-2025ஆம் ஆண்டில் சுமார் 20 பில்லியன் டாலராக (1,670 கோடி இந்திய ரூபாய்) இருந்தது, இதில் மருந்து, பொறியியல் பொருட்கள், விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய துறைகளாக உள்ளன என்று இந்தோ-லத்தீன் அமெரிக்க வர்த்தக சபை (ILACC) தெரிவித்துள்ளது.
இந்த சபை நொய்டா அல்லது அகமதாபத்தில் தலைமையகம் வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது.
தீடீரென அதிக உறுப் பினர்களின் ஆதரவைப் பெற்று சென்னையை தனது தலைமையகம் அமைக்க தேர்ந்தெடுத்துள்ளது/ லத்தீன் அமெரிக்காவிலிருந்து விவசாய செயலாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் 40 மில்லியன் டாலர்(சுமார் ரூ2500 கோடி) முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்னையில் நடை பெற்ற ஹொரைசன் 2025 மாநாட்டில் இந்தத் திட்டங்கள் விவரிக்கப்பட் டன. இந்த மாநாட்டு தென் னிந்திய பிரிவு சென்னையில் தலைமையகம் அமைக்க முடிவு செய்தது
இந்த ஆண்டில் புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் இதை அடைய பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, குறிப்பாக அதன் துறைமுக வசதிகள் மற்றும் கொள்கைச் சூழல் மூலம் இந்தியா-லத்தீன் வர்த்தக ஒருங்கிணைப்பில் முன்னணியில் இருக்க முடியும்,” என்று தென்னிந்திய பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஷக்திவேல் கூறினார். “துறை சார்ந்த பொருத்துதல், வர்த்தக வசதி மற்றும் நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கான வெளிப்பாடு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத் துவோம்,” என்றார் அவர்.
மின்சார வாகனங்களுக் கான கனிமங்கள், குறிப்பாக அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலியில் இருந்து வரும் லித்தியம், மாநாட்டில் முக்கிய தலைப்பாக இருந்தது. “இந்த கனிமங்கள் இந்தியாவின் மின்சார வாகன தயாரிப் பிற்கு உறுதுணையாக இருக்கும், அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்காவிற்கு சந்தையை வழங்கும்,” தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் வர்த்தக சமநிலையை மேலும் பரஸ்பர நன்மை தரும் வகையில் மாற்ற கூட்டமைப்பு முயற்சிக்கிறது, வெறும் ஏற்றுமதி போட்டியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளவில்லை. மேலும், இந்திய தொழில்முனைவோர், குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் செய்பவர்களுக்கும் விசா நடைமுறைகளை எளிமைப் படுத்த லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் உருகுவே, அர்ஜென்டினா, சிலி, வெனிசுலா, பெரு, எல் சால்வடோர், கியூபா, ஹோண்டுராஸ் மற்றும் பராகுவே ஆகிய ஒன்பது லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நொய்டா அல்லது அகம தாபாத்தில் தலைமையகம் திறக்கப்படும் என்று கூறப்படு வந்த நிலையில் தடையில்லா மின்சாரம், எளிய தொழில் கொள்கை, திறமையான பணியாளர்கள் மற்றும் சரக்குகளைக் கையாள எளிதில் அணு கும் துறைமுகங்கள் போன்றவை சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டை வர்த்தகத் தலைமையகமாக அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.