விருதுநகர், ஜூலை 15 விருதுநகர் மாவட்ட கழக அமைப்பாளர் பெ.சந்தனம் – வள்ளி இணையரது பேரனும், பாலையம்பட்டி ந.சிவக்குமார் – அமுதா இணையரது மகனுமான சி.உதயகுமார், திருச்சி திருமங்கலம் பொ.வீரப்பன் – பத்மாவதி இணையரது மகள் வீ.பிரேமா ஆகியோரின் இணை ஏற்பு விழா 13.07.2025 ஞாயிறு காலை 8 மணிக்கு, பாலையம்பட்டி விஜய் மகாலில் நடைபெற்றது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் மணமக்கள் உறுதிமொழி ஏற்கச் செய்து இணை ஏற்பு விழாவினை நடத்தினார். மாவட்டத் துணைத் தலைவர் பா.இராசேந்திரன், துணைச் செயலாளர் இரா.அழகர், பொதுக்குழு உறுப்பினர் வெ.முரளி, இரா.முத்தையா, தோழர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இணை ஏற்பு விழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.1000-/ நன்கொடையை வழங்கினர்.