காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்குத் தடை தடையை மீறி சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு

2 Min Read

சிறீநகர், ஜூலை 15- காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்த  முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு காவல்துறையினர் தடை விதித்ததால், அத்தடையை மீறி சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியாகிகள்  நாள்

ஜம்மு – காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையினரால் காஷ்மீர் மக்கள் 1931 ஆம் ஆண்டு சுட்டுக்  கொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 13. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13 ஆம் தேதி அங்கு தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தியாகிகள் கல்ல றைக்கு ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அனுமதிக்கவில்லை. காஷ்மீர் அரசி யல் கட்சித் தலைவர்கள் பலரும்  12.7.2025 அன்று வீட்டுக்காவ லில் அடைக்கப்பட்டனர். மேலும் தியாகிகள் கல்லறை அமைந்துள்ள பகுதியில் பெரும் எண்ணிக்கையில்  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

பதற்றம்

ஜம்மு–  காஷ்மீர் யூனியன் பிரதேச முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கும் காவல் துறையினர்  தடை விதித்தனர். ஆனால், இந்தத் தடையை மீறி உமர் அப்துல்லா தியாகிகள் கல்லறைக்கு நேற்று (13.7.2025) சென்றார். அங்கும்  அவரை காவல்துறையினர் தடுத்த நிலையில், திடீரென சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் அவருடைய தந்தை பரூக் அப்துல்லா மற்றும் அக் கட்சித் தலைவர்கள் சென்றனர். அவர் சுவர் ஏறிக் குதிப்பதைப் பார்த்ததும் செய்வதறியாது காவல்துறையினரும், உயரதிகாரிகளும் திகைத்து நின்ற னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சுவர் ஏறிக் குதித்து உள்ளே இறங்கும் காட்சிகளின் காட்சிப் பதிவு களைத் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் உமர் அப்துல்லா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், ‘‘இது வெளிப்படையான ஜனநாயக விரோத நடவடிக்கை. ஜூலை 13 எங்கள் ஜாலியன் வாலாபாக் கடைப்பிடிப்பு தினம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய முஸ்லிம்கள், இன்று வில்லன்களாகச் சித்தரிக்கப்படுவது வெட்கக்கேடு. தியாகிகளின் கல்லறைகளுக்குச் செல்ல மறுக்கப்பட்டாலும், அவர்களின் தியாகங்களை மறக்க மாட்டோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; உமர் அப்துல்லா வுக்கு நடந்தது, மக்கள் பிரதி நிதிகள் யாருக்கும் எங்கு வேண்டு மானாலும் நடக்கலாம்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் ஒருமித்த குரலில் இதனைக் கண்டிக்க வேண்டும். காஷ்மீர்-தமிழ்நாடு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரி மையை பாஜக அரசு திட்டமிட்டே பறிக்கிறது. மாநில தகுதி  கோரும் நிலையில், அங்கு நிலைமை எவ்வளவு மோசம் என்பதை விளக்குகிறது. சுவர் ஏறிக் குதித்து உமர் அப்துல்லா சென்றார்; தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இப்படியா நடத்து வது? தியாகிகளுக்கு மரியாதை செலுத்த கூடாது என்பதற்காகவே வீட்டு காவலில் ஒரு முதலமைச்சர் வைக்கப்பட்டுள்ளார். உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது, ஜம்மு-காஷ்மீரில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்தச் செயலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, அகிலேஷ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *