‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை தொடக்கம்

2 Min Read

சென்னை, ஜூலை14- அரசு சேவைகளை பொதுமக்களின் வீடுக ளுக்கு சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்ப ரத்தில் நாளை (15.7.2025) தொடங்கி வைக்கிறார்.

உங்களுடன் ஸ்டாலின்

பொதுமக்கள் அன் றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களு டன் ஸ்டாலின்’ எனும் புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள் ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைக ளின் 43 சேவைகளும் வழங் கப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகு திகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாம்களில் வழங்கலாம். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(15.7.2025) கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.7.2025) தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் விரைவு ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.

புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு 2 நாள்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் (16.7.2025) சோழன் விரைவு ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

நவம்பர் 30 வரை

மு.க.ஸ்டாலின் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததும், 38 மாவட்டங்களில் 196 இடங்களில் நாளை இந்த முகாம் நடக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *