திருவனந்தபுரம், ஜூலை 14- கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளி களில் மாணவர்கள் ஆசிரியர் களின் கால்களைக் கழுவும் (பாத பூஜை) நிகழ்ச்சி சனியன்று (ஜுலை 12) நடை பெற்றது. காசர்கோடு மாவட்டம் பந்தடுக்காவில் உள்ள சரஸ்வதி வித்யாலயா, மாவே லிக்கராவில் உள்ள வித்யாதிராஜா வித்யாபீடம் மத்தியப் பள்ளியிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக ஆலப்புழா வில் ஆசிரியர் அல்லாத பாஜக மாவட்டச் செயலாளரின் கால் களையும் மாணவர்கள் கழுவினார்கள்.
கேரள அரசு கண்டனம்: இந்த சம்பவத்திற்கு கேரள அரசு மற்றும் இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்த சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறிய கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி,”மாணவர்களிடம் அடிமை மனநிலையை ஏற்படுத்தும் நடைமுறைகளை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அறிவையும் சுய விழிப்புணர்வையும் கல்வி மூலம் மட்டுமே பெறவேண்டும். கல்வி என்பது ஜாதி அமைப்பின் பெயரால் எழுத்தறிவு மறுக்கப்பட்ட காலத்திலிருந்து போராடி பெறப்பட்ட உரிமை. இந்த உரிமையை யாருடைய காலடியிலும் விட்டுக்கொடுக் கக்கூடாது.
கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி உரிமைச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்காத எந்தவொரு பாடத்திட்டத்திலும் உள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுக் கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது.
சம்பவம் நடந்த சிபி எஸ்இ பள்ளிகளிடம் விரைவில் விளக்கம் பெறுமாறு பொதுக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும் குழந்தை உரிமை ஆணையம் தானாக முன் வந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.