மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வார்டு 169, தாதண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நேற்று (13.07.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார், மற்றும் அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.