வள்ளல் வீகேயென் அவர்கள் எப்படி குற்றாலம் வீகேயென் மாளிகையைப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான அரங்கத்தையும், மாணவர்கள் தங்குமிடத்தையும் தொடர்ந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து கொடுத்துச் சிறப்பித்தாரோ அதே வழியில் தனது தந்தையினைத் தொடர்ந்து குற்றாலம் வீகேயென் மாளிகை உரிமையாளர் கேப்டன்
வீ கேயென் ராஜா அவர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொடுத்து உபசரித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ‘வீகேயென்’ ராஜா அவர்களுக்கு பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். உடன் : கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்காசி மாவட்ட காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை.
வீகேயென் ராஜாவுக்குக் கழகத் துணைத் தலைவர் பாராட்டு

Leave a Comment