வாசிங்டன், ஜூலை 13– அய்ரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத புதிய வரியை ஆகஸ்ட் 1 முதல் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மெக்சிகோவுக்கும், அய்ரோப்பிய யூனியனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மெக்சிகோ தென் அமெரிக்காவின் போதைப்பொருள் மைதானமாக மாறி வருவதாக டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அய்ரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட அய்ரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து
கொலை செய்தவருக்கு மரண தண்டனை
தெஹ்ரான், ஜூலை 13- ஈரானின் புகான் நகரில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானின் தொழில் நகரமான புகானின் 37 வயது செல்வந்தர் ஒருவர் தன்னுடைய வீட்டில் வேலைசெய்யும் பணியாளரின் மகளை பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த கொடூர குற்றச்செயலை செய்த அந்த நபரை புகான் நகர காவல்துறையினர் கைதுசெய்தனர். பின்னர் விசாரணைக்குப் பிறகு அவர் குற்றவாளி என்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு பொதுவெளியில் மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று 11.7.2025 அன்று மாலை புகான் நகரின் முக்கிய சந்திப்பில் வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் இடையே இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று நீதிபதி தெரிவித்தார். ஈரானில் பொதுவாக மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள். கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய குற்றங்களுக்கு ஈரானிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை உண்டு, இருப்பினும் பொதுவெளியில் இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றுவது மிகவும் அபூர்வமானது ஆகும்.