வாசிங்டன், ஜூலை 13– நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக அமெரிக்கா வில் 1,300 அரசு ஊழியர் கள் பணிநீக்கம் செய் யப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்த நடவடிக்கை
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதலே பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அமெரிக்கா வில் உள்நாட்டு பணி களில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வௌிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த துணை தூதர்கள் உட்பட 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். நிர்வாக மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
டிரம்ப் நிர்வாகத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் இருந்தபோதுதான் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமெரிக்க அரசு பணியில் இருந்த ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டனர்.
ஊழியர்கள்குறைப்பு
தற்போது அவர் இல்லாத நிலையிலும் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இவ்வாறு ஊழி யர்கள் குறைக்கப்பட்டு இருப்பது அமெரிக்க அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.