திபெத்தை விழுங்கும் சீனா பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சீன அரசு பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்

2 Min Read

பெய்ஜிங், ஜூலை 13– சீன ஆக்கிரமிப்பு திபெத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சீன அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று திபெத்தியன் ஆக்ஷன் இன்ஸ்டிட்யூட் (TAI) அறிக்கை வெளியிட்டுள்ளது.

உறைவிடப்பள்ளி

திபெத்தின் கிராமப்புறங் களில் இருந்து குறைந்தது 4 முதல் 6 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் பாலர் பள்ளி குழந்தைகள் பெற் றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சீன நிர்வாகத்தால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக, 6-18 வயதுடைய சுமார் 9 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் துறவிகள் கூட இந்தக் கட்டாயப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மாணவர் காலனித்துவம்

இந்த பள்ளிகளில் குழந்தைகள் தங்கள் தாய் மொழியான திபெத்திய மொழியைப் பேச தடை விதிக் கப்பட்டு, சீன மொழியில் கற்பிக் கப்படுகிறார்கள்.

அவர்கள் சீன மொழியைக் கற்கவும் பேசவும் கட்டாயப் படுத்தப்படுவதோடு, அரசு அங்கீகரிக்கப்பட்ட வரலாறு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இது திபெத்திய கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு “மாணவர் காலனித்துவம்” என்று TAI அறிக்கை தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து போதனைகள் வழங்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

பெற்றோர்களின் வாக்குமூலம்

குழந்தைகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும், சித்தாந்தக் கல்வி புகுத் தப்படுவதாகவும், அடை யாள அழிப்புக்கு உள்ளாக் கப்படுவதாகவும் இந் தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த வாக்கு மூலங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் சீன அரசின் தலையீடும், திபெத்திய மக்களின் தனித்துவத்தை அழிக்கும் இந்த அடையாள அழிப்பு கொள்கைகளும் திபெத்தின் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று TAI தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

திபெத்தின் 4,700 ஆண்டுகால கலாச்சாரத்தை அழிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற் கொண்ட ஒரு திட்டமிட்ட உத்தி இது என அறிக்கையை தயாரிப்பதில் களப்பணி ஆற்றிய திபெத்திய சமூகவியலாளர் டாக்டர். கியால் லோ தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *