சோழிங்கநல்லூர், ஜூலை 13– கடந்த 6.7.2025 அன்று அன்று பிற்பகல் 2 மணி அளவில் சோழிங்கநல்லூர் மாவட்டம் விடுதலை நகர் நூலகத்தில் மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவர் தேவி வரவேற்புரை ஆற்றினார். மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டிய அவசியம் பற்றியும் மகளிர்க்கான சீருடை பற்றியும் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் இறைவி கருத்துரை வழங்கினார்.
பெரியார் உலகம் நிதி சேர்ப்பது பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தன் கருத்துகளை கூறினார். ஜாதி, கடவுள், சடங்குகள் மறுப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் நம் மகளிர் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது பற்றிய தம் கருத்துகளை கலந்துகொண்ட அனைத்து மகளிரும் தெரிவிக்கும் கலந்துரையாடலாக நிகழ்ச்சி அமைந்தது. இப்படிப்பட்ட கலந்துரையாடல் தங்களுக்கு தெளிவினையும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் உருவாக்குவதாக மகளிர் தோழர்கள் மகிழ்ச்சியினைத் தெரிவித்தார்கள். மாவட்ட திராவிடர் கழக தலைவர் பாண்டு அனைத்து தோழர்களுக்கும் தேநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), விஜயலட்சுமி, ராதா, அருணா, ராணி, சுமதி, அனுசா ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வின் நன்றி உரையை ப்ரீத்தா வழங்கினார்.