அய்.நா. எச்சரிக்கை
நியூயார்க், ஜூலை 13 – எய்ட்ஸ் பரவல் தடுப்புக்கும் மருத்துவ உதவிக்கும் அமெரிக்கா கொடுத்து வந்த நிதியுதவியை திடீரென நிறுத்தியுள்ளது.
இதனால் 2029-க்குள் உலகளவில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான சுமார் 40 லட்சம் மக்கள் பலியாகும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் 60 லட்சம் பேருக்கு புதிய தொற்று உருவாகும் ஆபத்து உள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் எய்ட்ஸ் பரவல் தடுப்புக்கும் மருத்துவ உதவிக்கும் பல ஆண்டுகளாக அமெரிக்கா நிதியுதவி கொடுத்து வந்தது. இதனால் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணி க்கையை கடந்த 30 ஆண்டுகளில் குறைக்க முடிந்தது.
ஆனால் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் செலவுகளைக் குறை ப்பது என்ற பெயரில் நிவாரண உதவி செய்யும் அமைப்புகளுக்கும் மருத்துவ உதவிகளுக்கும் செய்து வந்த நிதி ஒதுக்கீடுகளை வெட்டியது. நிதிப் பற்றாக்குறையால் இத்த னை ஆண்டுகாலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வந்த மருந்து விநியோக சங்கிலியில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அய்.நா. மருத்துவ மய்யங்கள் மூடப்படுவது, எய்ட்ஸ் தடுப்பு திட்டங்கள் முடங்கு வது, எய்ட்ஸ் பரிசோதனைகள் தடைபடுவது என பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் தான், நிதி உதவியைத் தொடர்ந்து வழங்காமல் நிரந்தர மாக நிறுத்தப் பட்டால் உலகம் முழு வதும் 40 லட்சம் பேர் எய்ட்ஸ் தொற்றால் இறப்பதுடன், 60 லட்சம் புதிய எய்ட்ஸ் தொற்றுக்கள் ஏற்படக் கூடும் என அய்.நா. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.