விழுப்புரம், ஜூலை 12– “சமஸ்கிருதத் திற்கு மட்டும் ரூ.2,533 கோடி! ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சூட்சுமத்தைப் புரிந்து கொள்வீர்!” – என்று திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அறிக்கையினை விழுப்புரத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டறிக்கையாக வழங்கி (09.07.2025) பரப்புரை செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் சே.வ.கோபண்ணா தலைமையில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன், நகர தலைவர் இ.இராஜேந்திரன், அ.சதிஷ், மாவட்ட அமைப்பாளர் கொ.பூங் கான் மற்றும் விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வேல்.அஜய், க.கனியமுதன், மு.விசுவா, பா.தசரதன், அழகு.செந்தில்குமார் ஆகியோர் இப்பரப்புரையில் ஈடுபட்டனர்.