இலால்குடி, ஜூலை 12– இலால்குடி பெரியார் பெருந் தொண்டர் மறைந்த உடுக்கடி மு.அட்டலிங்கம் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மு.கலைவாணன் நடத்தக் கூடிய மண்ணச்சநல்லூர் நற்பவி ஆயுர்வேத மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அறிஞர் அண்ணா சமுதாய திருமண மண்டபத்தில் 5.7.2025 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மருத்துவர் கே.ஆல்பர்ட் ரொமாண்டோ தலைமை வகிக்க ப.முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். திராவிட முன்னேற்ற கழக பிரமுகர் வி.எஸ்.பி.இளங்கோவன் தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட கழக காப்பாளர் ப.ஆல்பர்ட் சிறப்புரை ஆற்றிய பின்னர் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் ஏ.சிவசண்முககுமார், பானுமதி கண்ணன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் எஸ்.தியாகராஜன், அ.தமிழரசு மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியில் மருத்துவர்.ஆல்பர்ட் ரொமாண்டோ அவர்கள் முகாம் நடத்தும் நோக்கம் குறித்தும் பொதுமக்கள் உடலை நன்கு ஆரோக்கியத்துடன் பேணி காக்கும் அவசியத்துடன் விரிவாக விளக்கி பேசினார்.
இந்நிகழ்வில் அனைத்து கட்சி பிரமுகர்கள், திராவிடர் கழக தோழர்கள், அரிமா சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என அனைத்து தரப்பினரும் பங்கு பெற்று சிறப்பித்தனர். மேலும் நாளை வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன் மறைந்த மு.அட்டலிங்கம் படத்திற்கு மலர் தூவி மாயாதை செலுத்தினர். வருகை தந்த அனைவரையும் திருமதி.அ.பூங்குயில் குடும்பத்தினர் தேநீர் விருந்தளித்து உபசரித்தனர். இறுதியாக பகுத்தறிவாளன் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவு பெற்றது.