புதுப்பட்டினம்,ஜூலை12– சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 9.7.2025 அன்று மாலை 6 மணிக்கு கல்பாக்கம் புதுப் பட்டினம் பேருந்து நிலையம் அருகில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா, கல்வி நிலையங்களில் சமத்துவ சிந்தனையுடன் கூடிய பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரவச்செய்ய ஆனையிட்ட திராவிட மாடல் அரசின் முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட காப்பாளர் சீ.பக்தவச்சலம் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் நெல்லை சாலமன் ஒருங்கிணைப்பில், அய்வர் வழி வ.வேம்பையன் நினைவு மேடையில் இக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்தை அனைவரையும் வரவேற்று கல்பாக்கம் பகுதி பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.விஜயகுமார் வரவேற்புரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அ.செம்பியன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன்,திமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.சரவணன், திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் மருத்துவர் ஆர்.டி.அரசு, ஒன்றிய குழு துணைத் தலைவர் எஸ்.ஏ.பச் சையப்பன், அரேபியன் கார்டன் உரிமையாளர் கே.அப்துல் நபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவு கலைத்துறை மாநில தலைவர் மு.கலைவாணர் தொடக்கவுரை யாற்றினார்.
திருவள்ளுவர் மன்றத்தைச் சேர்ந்த மா.சமத்துவமணி, திமுக வின் மாநில இளைஞரணித் துணைச்செயலாளர் ப.அப்துல் மாலிக், மேனாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஈ.பக்கீர் முகமது தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக் குரைஞர் சோ.சுரேஷ் சுயமரியாதை இயக்கம் தொடங்கியதன் நோக்கம் குறித்தும், சேரன்மாதேவி குருகுலப்போராட்டம் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு சமஸ்கிருதத்திற்கும், தென்னிந்திய மொழிகளுக்கும் ஒதுக்கியுள்ள நிதி குறித்தும் விளக்கிப்பேசினார்.
திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சுயமரியாதை இயக்கம் பாடு பட்டது யாருக்காக என்றும், சுயமரியாதை இயக்கம் தொடங் கிய காலம் முதல் கல்விக்கான முக்கியத்துவம் குறித்தும், தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தற்போதைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்து வரும் கல்விப்புரட்சி பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் ஜாதி ஒழிப்பிற்காக அரசு அறிவித்துள்ள விதிமுறை களையும், அனைத்து பள்ளி, கல்லூரி விடுதிகளின் பெயர் களை ”சமூக நீதி விடுதிகள்” என அறிவித்தையும் பாராட்டி சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த அரசு கல்விக்காக அறிவித்துள்ள திட்டங்களையும், அதே நேரத்தில் தமிழ்நாட்டு கல்வியை சிதைப்பதற்காக பாஜக அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை 2020 குறித்தும் எடுத்துரைத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சே.சகாயராஜ்,ஒன்றிய தலைவர் கெ.குசன் அ.சிவக்குமார், குழல் லோ.குமரன், சீ.தீனதயாளன், பி.பிச்சமுத்து, மு.அருண்குமார், திருக்குறள் ம.வெங்கடேசன், ப.முருகன், சு.ஆனந்தி, சவுந்தரி கருணாகரன், செ.கவுதம், பொன்.இராஜேந்திரன், கல்பாக்கம் இராமச்சந்திரன், விடுதலை சாமு, மு.நீலமேகம், ஆ.குகன்நாதன், துரை.பேரானந்தம், மு.கோவிந்தசாமி, கு.இரவிக்குமார், டென்சிங் சம்பத், ப.அஜித்குமார், துரை.ராமு, இரா.சேகர், ஆ.குமரவேல், திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஅய், சிபிஎம், மமக, இ.யூமு.லீக், மதிமுக, த.வா.க, த.மீ.வி.வே பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இடையிடையே மழை வந்தாலும் மக்கள் அனை வரும் கலையாமல் இருந்து உரைகேட்டனர். பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந் தரம் நன்றி கூற கூட்டம் நிறைவ டைந்தது.