சென்னை, ஜூலை 12 துணை மருத்துவ பட்டயப் படிப்புகள் மற்றும் சான் றிதழ் படிப்புகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பார்வை அளவியல், மருந்தியல் உட்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வகையான சான்றிதழ் படிப்புகளுக்கும், இருவேறு மருத்துவ ஆவண படிப்புகளுக்கும் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அந்த படிப்புகளுக்கு www. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 9-ம் தேதி தொடங்கியது.
வரும் 23-ம் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகள், ஓராண்டு, ஆறு மாத கால படிப்புகளாக பயிற்றுவிக்கப்படும்.
இந்த படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேடு, கூடுதல் விவரங்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.