இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறித்த 2024-2025ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தில் ஹிந்தி பேசாத மாநிலங்கள் தனிநபர் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னணியில் இருப்பதாக இந்திய தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு கண்காணிப்பு அமைப்பு (Indian Tech & Infra) புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.
இந்திய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியான தனிநபர் வருவாயை வண்ணக் குறியீடுகளுடன் காட்டுகிறது. இதில் நீல நிறம் மிக அதிக தனிநபர் வருவாயையும், வெள்ளை நிறம் நடுத்தர வருவாயையும், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் குறைந்த மற்றும் மிகக் குறைந்த வருவாயையும் குறிக்கின்றன.
தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் / தெலங்கானா போன்ற தென் மாநிலங்களும், மகாராட்டிரா, குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் தனிநபர் வருவாய் உயர்ந்து காணப்படுகிறது
மறுபுறம், ஹிந்திபெல்ட் எனப்படும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற வட இந்திய மாநிலங்கள், அதாவது ஹிந்தி பேசும் மாநிலங்களில் தனிநபர் வருவாய் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பிராந்திய ஹிந்தி எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஹிந்தி பேசாத தென் மற்றும் மேற்கு மாநிலங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி தனிநபர் வருவாயில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன.