26.11.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை – ப.சிதம்பரம்.
👉தெலங்கானாவில் மோடியின் நண்பர் கே.சந்திரசேகர ராவ் ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் போராடி வருகிறது, – ராகுல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் 130 உறுப்பினர் களைக் கொண்ட உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியை அறிவித்தது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) அதிகபட்ச பங்களிப்பையும், அதைத் தொடர்ந்து உயர் ஜாதியினருக்கும் அதிகப் பங்கையும் அளித்துள்ளது.
👉 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2ஆம் தேதி – அனைத்துக் கட்சி கூட்டத்தை மோடி அரசு கூட்டுகிறது
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தாழ்த்தப்பட் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், ஜேடி(யு) கட்சி பாட்னாவில் இன்று (26.11.2023) ‘பீம் சன்சத்’ நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
👉 2021 முதல் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புதிய ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2300லிருந்து 7400ஆக அதிகரித்துள்ளது என சிறு தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு.
– குடந்தை கருணா