கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.7.2025

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை இல்லை: ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை குடியுரிமை ஆதாரமாக ஏற்க அறிவுரை: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்.

* தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42% இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்; அவசர சட்டம் மூலம் நடைமுறைப்படுத்த முடிவு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ தான் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தி இந்து:

* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டதாக புகார். தங்களை வங்காளதேசியர்கள் மற்றும் ரோஹிங்கியாக்கள் என சந்தேகித்ததாகவும் ஒடிசா காவல்துறையினரால் துன்புறுத்தப்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* கடந்த நான்கு ஆண்டுகளில் குஜராத்தில் ஏழு முதல் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சனம். பாலம் இடிந்து விழும் சம்பவங்களில் குஜராத் பீகாருடன் போட்டியிடுகிறது, பாஜக ஊழல் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் கண்டனம்.

– குடந்தை கருணா

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *