பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் உதவி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
7 Min Read

சென்னை, ஜூலை 11 பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் தொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோர்  பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் ரூ. 25 லட்சம் வரை கடன் பெற விண்னப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

ரூ.25 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் ரூ. 25 லட்சம் வரை கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். TABCEEDCO என்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல் படும் தமிழ்நாடு அரசின் நிறுவனமாகும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தக் கடன் உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம்: விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் TABCEEDCO மூலம் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்
தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் உதவி
தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணையவழிக் கலந்தாய்வு தொடங்கியது

கோவை ஜூலை 10 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கல்விப் பிரிவு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழிற்கல்விப் பிரிவு இடஒதுக்கீட்டுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது.

இது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் (வேளாண்மைப்பிரிவு) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மறுமதிப்பீடு, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி மாற்றம் அவற்றுக்கான சரிபார்ப்புப் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நேரடி கலந்தாய்வு வரும் 14-ம் தேதி நடைபெறும்.

அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (9-ம் தேதி) தொடங்கியது. இது வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். பொதுக்கல்விப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு இணைய வழி கலந்தாய்வும் இன்று தொடங்கி, வரும் 15-ம் தேதி வரை நடைபெறும்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்த விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 19-ம் தேதியும், 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 29-ம் தேதியும், 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதியும், 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும்.

பொதுக்கல்விப் பிரிவு, தொழிற்கல்விப் பிரிவு விண்ணப்பதாரர்களில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்தவர்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4-ம் கட்டமாகவும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.

துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்களுக்கு இணையதள விண்ணப்பம் மற்றும் துணைக் கலந்தாய்வுக்கான தேதி, துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும். வரும் செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரி திறப்பு மற்றும் அறிமுக நாள் ஆகும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *