அவாளின் கீழடியும்– ‘பதவிச்சாமி’யால் ஆழமாகத் தோண்டப்பட்ட கீழடியும்!

viduthalai
2 Min Read

கீழடி நாகரிகத்தின் தொன்மை – திராவிட நாகரிகத்தின் பெருமை – எல்லாம் இனி வருங்காலத்தில் உலகத்தாரால் அடையாளம் காணப்பட்டு விட்டால், தாங்கள் இதுவரை திட்டமிட்டுப் பரப்பி வந்த ‘வேத கால நாகரிகமே முந்தியது’ என்னும் கற்பனைக் கதைகள் உடைந்து, குட்டு வெளிப்பட்டு விடுமே என்று ஆரியம் பதறுகிறது.

அதனால்தான் கீழடியின் உண்மைகளை வெளியே கொண்டுவரும் அதிகாரி கொடுத்த அறிக்கை, ஒன்றிய அரசினை ஒவ்வாமை நோய்க்கு ஆளாக்கி விட்டது!

காலத்தால் மூத்த சிந்துவெளி நாகரிகத்திற்குள் சரசுவதி நதியின் பெயரை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கிறது. கீழடி உள்ளிட்ட  தமிழ்நாட்டு அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை வேத, சமஸ்கிருத கலாச்சாரமே, முந்தையது முதன்மையானது என்ற பொய்யை ஒழித்துவிடும் என்ற கலக்கத்தால், ஒரு சில சில்லறைத்தன ‘சித்து’ விளையாட்டு விளையாடுகிறது ஒன்றிய டில்லி ஆர்.எஸ்.எஸ். அரசு!

நாடு தழுவிய எதிர்ப்பு – ஏன் உலகம் பரவிய எதிர்ப்பு இதற்கு ஏற்பட்டவுடன், இப்போது ஓய்வு பெற்ற ஒரு பார்ப்பனீய ÿராமன் என்பவரிடம் புதிதாகக் கருத்துக் கேட்டு வாங்கப் போறாளாம்!

அவாளுக்கு என்ன தனி ஸ்பெஷல் ‘தகுதி’ தெரியுமோன்னோ!

‘‘கீழடியில் ஒன்றுமேயில்லை – எல்லாம் மண்ணைப் போட்டு மூடிவிடலாம்’’ என்பதுபோல ஏற்கெனவே  இங்கே கருத்துச் சொன்னவா அவா!

‘‘‘திராவிடமாம் திராவிடம்’ யாரோ ஒரு வெள்ளைக்காரன் வந்து இப்படியெல்லாம் தத்துப்பித்துண்ணு உளறிட்டன். அவா கட்டிவிட்ட கதையை – இவாளும் எடுத்துண்டு ‘தாட்பூட் தஞ்சாவூர்’ என குதிக்கிறா?’’ என்று போடு போட்டா! ‘‘ஆனால், அந்த சூத்திரன்கள் நம்ம மனுஸ்மிருதியிலேயே அந்த வார்த்தை இருக்கே – மனுவும் வெள்ளைக்காரனுக்கு உறவா?ன்னு கேட்டுட்டா? நேக்கு மானம் போறது’’ – அக்கிரகார ஒப்பாரி!

இப்படி கதை போயிண்டே இருக்க ‘‘இந்த கீழடி அப்படி இப்படின்றாளே, என்ன ஓய் பண்ணறது!

நாம பிரச்சாரம் பண்ணறது, நம்ம  பகவான் குள்ள அவதாரம் வாமனனாகி லோகத்தையே மூனடியா அளந்து சூத்திரப் பசங்களை ஏமாத்தின கதையை சொல்லுவதெல்லாம்தான் இனி ஒரே வழியாக்கும்!

கீழடியாம் மேலடியாம், இப்படி தத்துபித்துகள் உளறுவாளுக்கு புத்தி கற்பிக்க இவாளெல்லாம் அர்பன் (நகர்ப்புற) நக்சல் தீவிர பயங்கரவாதிகள்ன்னு, நம்ம ஓம்மினிஸ்டரிடம் சொல்லி, பிடிச்சு உள்ளே போட, திகாருக்கு அப்பாலே அனுப்ப ஒரு அவசர ஏற்பாடு பண்ண எவ்வளவு நேரமாகும்.

இப்படி பேசறவாளோ, தமிழ்நாட்டிலேயே நாம் பெலமா கால ஊன்றத்துக்கு ஒருவரை விபீடண ஆழ்வாரப் பிடிச்சிருக்கே அப்புறம் கீழடியாவது மேலடியாவது!’’ என்று துணிந்தது ÿமான் மேலடி பதவிச்சாமி & கோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *