டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாராட்டிராவை போல பீகாரில் வெற்றி பெற ஏழைகளின் வாக்குரிமையை திருட பாஜ சதி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு. பீகாரில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை குறித்து எதிர்க் கட்சிகள் பேரணி. ராகுல், தேஜஸ்வி பங்கேற்பு.
* தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு; அமைச்சரவை விரைவில் முடிவு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று நமக்கான பல வழிகள் இருக்கின்றன. மாணவர்களாகிய நீங்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி 75-ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுரை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*பீகாரில், தேர்தல் ஆணையம் அதன் சொந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை, வாக்காளர்கள் மீது பொறுப்பை சுமத்துகிறது, ஏற்கெனவே உள்ள பட்டியல்களைப் புறக் கணிக்கிறது என அரசியல் கருத்தாளர்கள் குற்றச்சாட்டு.
தி இந்து:
*இந்தியாவில் உயர் கல்வியில் அமைதியான நெருக்கடி ஆழமாக ஓடுகிறது என்று புகழ் பெற்ற கல்வியாளரும் மேனாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான தீபக் நய்யார் பேச்சு.
தி டெலிகிராப்:
* வாக்காளர்களின் தகுதியை உறுதிப்படுத்த குடியுரிமை ஆவணங்களை சரிபார்ப்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை, மேலும் அது மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) O.P. ராவத் விமர்சனம்.
* உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், “கன்வார் யாத்திரை பாதைகளில் ஸநாதனமற்றவர்களைச் சுத்தப்படுத்தும்” பணியில் ஈடுபட்டு, கடைகளில் “சோதனை” நடத்தி, அதன் உரிமையாளர் களையும் ஊழியர்களையும் துன்புறுத்தி, விளைவு களைப் பற்றிய அச்சமின்றி, சாது என்று கூறிக் கொண்டு, யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் சிறப்பு ‘க்யூ ஆர்’ குறியீட்டை பயன்படுத்தி அராஜகம்.
– குடந்தை கருணா