ராணிப்பேட்டை, ஜூலை 10 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேருந்து நிலை யத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் (கலைஞர் அறிவாலயம்) 7.7. 2025. அன்று மாலை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர்
வீ. அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் ஊமை. ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், மாவட்ட பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜை, கொள்கை முழக்கமிட்டு கைத்தறி பயனாடைகள் அணிவித்து வரவேற்றனர்.
பனப்பாக்கம் பேரூராட்சித் தலைவர் சீனிவாசன் பொதுச்செயலாளருக்கு கைத்தறி பயனாடை அணிவித்து வரவேற்றார். மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் அனை வரையும் வரவேற்று தம் பங்களிப்பை அறிவித்தார்.
தொடக்க உரையாக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமனும், நோக்க உரையை மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வமும் மாநாடு பற்றி கருத்துரையாற்றினர். இணைப்புரையை தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் ஒருங்கிணைத்தார்.
பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், எதிர் வரும் 4.10.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா ஒரு நாள் மாநாடாக நடைபெற உள்ளதில் ஆசிரியரின் எதிர்பார்ப்பையும், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள இருப்பதையும், ஆரம்பம் முதல் எப்படி முடிய வேண்டும் என்பதையும் தெளிவான விளக்க உரையாற்றினார்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ. வெ. முரளி ஆசிரியரின் அறிக்கையை வாசித்து கருத்துரையாற்றினார். மாவட்ட ப. க. து.தலைவர் போ. பாண்டுரங்கன், மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ், மாவட்ட செயலாளர் செ. கோபி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிங்கப்பூர் சங்கர், பெரப்பேரி சங்கர், மாவட்ட மகளிரணி தோழியர் லோ. செல்வி, மகளிர் பாசறை லோ. மணியம்மை, மாவட்ட. து. தலைவர் பொன். வெங்கடேசன், மாவட்ட ப. க. செயலாளர் ந. இராமு ஆகியோர் தம்முடைய மாநாட்டு பங்களிப்பை அறிவித்து மாநாடு சிறக்க ஆலோசனைகளை வழங்கினர்.
அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என உறுதியாகக் கூறினர். மேலும் மாநாட்டு விளம்பரம், சுவர் எழுத்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுக்க செய்வது, மூன்று பேருந்துகளில் மக்களை அணிதிரட்டி மாநாட்டிற்கு அழைத்துவருவது என தீர்மா னிக்கப்பட்டது.
மாநாடு நடைபெறும் மாவட்டமான செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செம்பியன், மாவட்ட செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் ஆ. பா. கருணாகரன் ஆகியோர் மாநாட்டின் சிறப்பைக் கூறி ராணிப்பேட்டை மாவட்ட தோழர்களின் பங்களிப்பை வியந்து பாராட்டி கருத்துரையாற்றினர். நிறைவாக மாவட்ட. து.செயலாளர் க. சு. பெரியார்நேசன் நன்றி கூறினார்.
நிதி அறிவிப்பும்– பங்களிப்பும்!
1.ஊமை. ஜெயராமன்– தகடூர். தமிழ்செல்வி இணையர் குடும்பம் சார்பாக ரூபாய் 25,000/-
2.).பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தம் சார்பாக ரூபாய் 20,000/-
3.).சு. லோகநாதன் இணையர் லோ. செல்வி குடும்பம் சார்பாக 20,000/-மற்றும் 100 லுங்கிகள்.
4.).பு. எல்லப்பன் மாநாட்டு பிரச்சாரத்திற்கு 30 நாட்களுக்கு பிரச்சார வாகனம்., சுவர் எழுத்து பிரச்சாரம், 100 பயனாடைகள்,
5.).சொ. ஜீவன்தாஸ் ரூபாய் 30,000/-
6.).செ. கோபி 10,000/-
7.).மா. செயலாளர் செ.கோபியின் மகள்கள் மணிமொழி, கனிமொழி ரூபாய் 10,000/-
8.).ந. இராமு 5,000/-
9.).போ. பாண்டுரங்கன் பெரியார் உலகத்திற்கு ஏற்கெனவே ரூபாய் 25,000/-வழங்கியது போக மீதி 75,000/- வழங்குவதாக உறுதியளித்தார்.
10.).சிங்கப்பூர் சங்கர் 2,000/-
11.).பெரப்பேரி சங்கர் குடும்பம் சார்பாக 20,000 /-
12.).க. சு.பெரியார்நேசன் 1,000 /-
13.).பொன். வெங்கடேசன் 1,000 /-
14.).மாவட்ட தலைவர் மகள். லோ. மணி யம்மை தம் ஒரு மாத ஊதியம் ரூபாய் 10,000 /- ஆக மொத்தம் 1,54,000 /- பெரியார் உலகத்திற்கு 75,000 /-