கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை;
நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது!
‘இன்னார்தான் படிக்கவேண்டும்’ என்று இருந்ததை மாற்றி,
இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்!
சமூகநீதிப் போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு!
திருச்சி, ஜூலை 10 – கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’ என்று இருந்ததை மாற்றி, இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்! சமூகநீதிப் போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.7.2025) திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற ஜமால் முகமது கல்லூரி விழாவில் ஆற்றிய உரை வருமாறு:–
முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அதுமட்டுமல்ல, ஆய்வுக்கூட்டம், அர சுப்பணி என தொடர்ந்து Busy-ஆக இருந்தாலும், உங்களைப் போன்ற Young students-அய் சந்திக்கின்றபோது எனக்கு Energy வந்துவிடுகிறது! அதிலும் students அதிகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால், உடனே ஓ.கே. சொல்லிவிடுவேன்! இப்போதுகூட, திரு வாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது, இது முதல்முறை கிடையாது! ஏற்கெனவே, 2006 இல் “கல்லூரி நிறுவனர் நாள் விழா”-விற்கு வந்திருக்கிறேன். அடுத்து, இன்றைக்கு திறந்து வைத்திருக்கும் குளோபல் ஜமாலியன் பிளாக்கிற்கு அடிக்கல் நாட்டுவதற்கு 2022 இல் காணொலிக்காட்சி மூலமாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
“இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்” கலந்துகொண்டேன்
கடந்த மே மாதம்கூட “இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்” கலந்து கொண்டேன். ஒற்றுமையும் – சகோ தரத்துவமும் எப்படி வலுப்பட வேண்டும் என்று நாட்டிற்கு வழிகாட்டும் நிறுவனமாக இந்த கல்லூரி இருக்கிறது! இங்கு உங்களுக்குள் உருவாகும் friendship எல்லா காலத்திற்கும் தொடர வேண்டும்! கல்லூரி நட்பு, old age வரை உறுதியாக இருக்க வேண்டும். அது இந்த சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும்! ஏனென்றால், இந்தக் கல்லூரியை உருவாக்கிய ஹாஜி ஜமால் முகமது சாஹிப் அவர்களும், ஜனாப் காஜா மியான் ராவுத்தர் அவர்களும் இப்படிப்பட்ட நல்லிணக்கம் உருவாகி, இந்தப் பகுதியில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ மக்களெல்லாம் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்தார்கள்! அது நனவாகி, உங்களின் கல்விக் கனவையும் 75 ஆண்டுகளாக நன வாக்கி இருக்கிறது இந்தக் கல்லூரி! கல்லூரி நிறுவனர்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்!
கடந்த 75 ஆண்டுகளில், உங்களு டைய ஆயிரக்கணக்கான Seniors சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள்! எந்த நோக்கத்தோடு இந்தக் கல்லூரியை உருவாக்கினார்களோ, அதிலிருந்து விலகாமல் இன்றுவரை இது வெற்றி கரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிர்வாகக் குழுவினர் – கல்லூரி முதல்வர்கள் – பேராசிரியர்கள் உள்ளிட்ட எல்லோரையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.
அதேபோல, இந்தக் கல்வி நிறு வனத்திற்கும், அங்கே படிக்கின்ற மாண வர்களால் தான் பேரும் புகழும் கிடைக்கும். உயர்ந்த சிந்தனையாளர்களோடு தொலைநோக்குப் பார்வையை செயல்வடிவமாக்கப் போகின்றவர்கள் மாணவர்களான நீங்கள்தான்!
படிப்புதான் உங்களின் நிலையான சொத்து!
மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதுதான் உங்களின் நிலை யான சொத்து. அதன்படி நீங்கள், பல்வேறு திறமைகள் கொண்டவர்களாக, தன்னம்பிக்கையும் – சமூக அக்கறையும் நிறைந்தவர்களாக வளர வேண்டும்!
உங்களின் மேனாள் மாணவர்கள் பட்டியலில் பல அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள் கூட இருக்கிறார்கள். நம்முடைய தமிழ்நாடு கேபினட்டில் இரண்டு அமைச்சர்கள் உங்கள் கல்லூரியில் படித்து உருவான மாண்புமிகுக்குரியவர்கள்! ஒருவர் கே.என்.நேரு. மற்றொருவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். உங்கள் Seniors எங்கள் கேபினட்டிலும் Seniors தான். நாளைக்கு உங்களில் இருந்து சிலர்கூட அந்த பட்டியலில் வரலாம்! வரவேண்டும்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.
நானும் – தமிழ்நாடு அரசும்
பெருமை அடைகிறோம்!
‘ஓரணியில் தமிழ்நாடு’ – நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது! நான் அரசியல் பேசவில்லை! மாணவர்களுக்கு நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்று பேசுகிறேன்! கல்லூரிகள் எத்தனையோ பல தலைவர்களை கொடுத்திருக்கிறது. அப்படி இந்தக் கல்லூரி கொடுத்த பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்கள், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வழியில் வந்து, சமுதாயத் தொண்டாற்றி இன்றைக்கு தகைசால் தமிழராக நம்மிடையே உயர்ந்து நிற்கிறார்! நல்லிணக்க உள்ளமும், நாட்டு நலன் சார்ந்த நற்சிந்தனையும் கொண்ட அவருக்கு விடுதலை நாளில் (ஆகஸ்ட் 15-இல்) தகைசால் தமிழர் விருதை வழங்குவதில் நானும் – தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறோம்! ஏன் நீங்களும் தான் பெருமையை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.
‘திராவிட மாடல்’ அரசின் மாணவர்கள் நலம்பயக்கும் பல்வேறு திட்டங்கள்!
நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டின் – தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சிதான் முக்கியம். அந்த வளர்ச்சிக்கு அடித்தள மாக நாம் நினைப்பது, அறிவுச் செல்வம் தான்! அதனால்தான் கல்விக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டி ருக்கிறோம். இங்கு ஏராளமான மாண வர்கள் இருக்கிறீர்கள். நம்முடைய அரசு செய்துகொண்டு இருக்கும் சாதனைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
உங்களின் திறன் மேம்பாட்டுக்கு துணையாக நின்று, இன்றைக்கு பல்வேறு உயர்ந்த பொறுப்புகளில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அமருவதற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய திட்டம் தான் “நான் முதல்வன்” திட்டம்!
கல்விக்குப் பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்று, மாணவ – மாணவிகளுக்குத் துணையாக மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்!
அதுமட்டுமல்ல, கல்லூரிக் கனவு – வெற்றி நிச்சயம் என்று பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக வளர்த்தெடுக்கியறோம்! புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம்! அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இளைஞர்களாகிய நீங்கள் ஊக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்! எப்போதும் இளைஞர்களுக்கு துணை யாக இருக்கிறோம்!
‘எல்லார்க்கும் எல்லாம்’
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் நம்முடைய Motto! இதுதான் ‘திராவிட மாடல்!’ கடந்தகால படிப்பினைகளின் நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு எதிர்காலம் வளமாக அமைய வேண்டும்! அந்த எதிர்காலம் என்பது நீங்கள்தான்! கல்வி நமக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’ என்று இருந்ததை மாற்றி, இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சமூகநீதிப் போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு!
நான் உங்களுக்குத் தரும் உறுதி!
மீண்டும் சொல்கிறேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவர்களான நீங்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று திரள வேண்டும்! நன்றாக படித்து மேலும் மேலும் உயர வேண்டும்! அதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் துணை நிற்பான்! அதே போல், இசுலாமிய சகோதரர்களின் அரசியல் உரிமைகளையும் காப்பாற்றும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எந்நாளும் இருக்கும்! இது நான் உங்களுக்குத் தரும் உறுதி!
20 இலட்சம் மாணவர்களுக்கு ‘லேப்–டாப்!’
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து. அதை மாணவர்களுக்கு கொடுப்பதோடு திறன் மேம்பாட்டை வளர்க்கவும், அதற்கேற்ற வசதிகளை வழங்கவும், ‘திராவிட மாடல்’ அரசு தயாராக இருக்கிறது.
அடுத்து, இளைய சமுதாயத்தை அறிவுச் சமூகமாக வளர்க்க 20 இலட்சம் மாணவர்களுக்கு விரைவில் Laptop தரப் போகிறோம்.
அனைவருக்கும் நன்றி, என்னை மன தளவில் உங்கள் வயதிலேயே வைத்திருக்க உதவுகின்ற மாணவர்க ளுக்கு சிறப்பு நன்றி!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் உரையாற்றினார்.