சென்னை, ஜூலை 9- டிஎன்பிஎஸ்சி புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலராக பணியாற்றி வந்த அ.ஜான் லூயிஸ், சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.