டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் – தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்: தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் எதிர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* பீகாரில் நடைபெறும் நிதிஷ் தலைமையிலான என்.டி.ஏ., டபுள் என்ஜின் ஆட்சியில், பீகார் குற்ற நகரங்களின் தலைமையிடமாக மாறி விட்டது, காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம்.
* மகாராட்டிரா அரசின் ஹிந்தித் திணிப்பு கொள்கைக்கு எதிரான தாக்கரே சகோதரர்களின் பேரணிக்கு, ஆளும் சிவசேனா அமைச்சர் ஆதரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம்: “2,000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்துள்ளதாகவும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளை விக்கக கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன்” என வருத்தம்.
தி இந்து:
* தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை (TNSDA), 2024-2025 அகழ்வாராய்ச்சி காலத்தில் ஏழு தொல்பொருள் தளங்களில் வெவ்வேறு அடுக்கு அடுக்குகளில் இருந்து தோண்டப்பட்ட 23 கரி மாதிரிகளை, முடுக்கி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (AMS) டேட்டிங்கிற்காக அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளது.
* பெண்களுக்கான வேலை ஒதுக்கீட்டிற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல்: “அரசாங்க வேலைகளில் 35% இடஒதுக்கீட்டின் பலனை மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே பெற முடியும் என்ற பொது நிர்வாகத் துறையின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,”
தி டெலிகிராப்:
* டி.அய்.எஸ்.எஸ். வேந்தரை நீக்குக: டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (டிஅய்எஸ்எஸ்) வேந்தர் டிபி சிங் மீது சிபிஅய் மருத்துவ கல்லூரி ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் பெயர் பதிந் திருப்பதை மேற்கோள் காட்டி, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை.
* ஒரு காலத்தில் நேர்மையான, திறமையான என்று புகழப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இப்போது தனது கூட்டணிக்குள்ளும் பீகார் மக்களிடையேயும் நம்பகத்தன்மை நெருக்கடியை எதிர்கொள்கிறார்.
– குடந்தை கருணா