தியான்சூய், ஜூலை9- மத்திய சீனாவில் உள்ள தியான்சூய் நகரில்(Tianshui city) செயல்பட்டு வரும் பிரபல மழலையர் பள்ளியில் பிரமுகர் ஒருவர் பிறந்த நாளின் போது மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்கப்பட்டது. இந்த கேக்கை சாப்பிட்ட 200 குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தனர். மேலும் சில குழந்தைகளின் பற்கள் கருப்பாக மாறின.
200 குழந்தைகளும் தற் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குழந் தைகள் சாப்பிட்ட கேக்கில் அதிகளவு செயற்கை நிறமூட்டி இருந்ததும் குழந்தைகளின் ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகமாக இருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிறமி தேசியப் பாதுகாப்பு வரம்பைவிட சுமார் 2,000 மடங்கு அதிகமாக இருந்ததாகச் சோதனையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் அறிவிப்பின் படி நடக்காமல் தன்னிச்சை யாக நடந்துகொண்ட பள்ளித்தலைமையாசிரியர். நிறமி அதிகம் சேர்த்த கேக் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.