வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் பணி

Viduthalai

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் ஸ்பெஷலிஸ்ட் அலுவலர்கள் (CRP SPL XV) பணிக்கென காலியாக உள்ள 1007 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: ஸ்பெஷலிஸ்ட் அலுவலர்கள் ( CRP SPL XV) பணிக்கென காலியாக உள்ள 1007 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளநிலை பட்ட, பட்ட மேற்படிப்பு, பொறியியல் பட்டம், இளங்கலை சட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850 /-

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2025ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *