இஸ்ரோவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு.. விஞ்ஞானி பதவிக்கு 39 காலிப்பணியிடங்கள் உள்ளன. சிவில், எலெக்ட்ரிக்கல், ரெபிரிகேரட்டின், ரெப்ஜினினேட்டர், ஏசி மற்றும் ஆர்கிடெக்சர் இன்ஜினியரிங்கள் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தொடக்கமே ரூ.57,000 அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது.
இஸ்ரோவில் குரூப் ஏ பதவிகளுக்கான விஞ்ஞானி/ பொறியாளர் (Scientist/Engineer `SC’) பதவிக்கு ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்: சிவில் – 19. எலெக்ட்ரிக்கல் – 10. குளிர்சாதன பெட்டி & ஏர் கண்டிஷனிங் – 9. ஆர்கிடெக்சர் – 1. மொத்தம் – 39.
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு 14.07.2025 தேதியின்படி, அதிகபடியாக 28 வயதை நிரம்பி இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள் 33 வயது வரை, ஒபிசி பிரிவினருக்கு 31 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் 15.07.1997 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 15.07.1994 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 15.07.1992 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இஸ்ரோ விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் B.E/B.Tech பட்டப்படிப்பை 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Architecture பிரிவிற்கு அதற்கான இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: விஞ்ஞானி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். இதனுடன் கொடுப்பனை, அகவிலைப்படி மற்றும் இதர செலவினங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புது டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பாணை இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் (objective type) நடத்தப்படும். இதில் தேர்வானவர்கள் நேர்காணலுக்கு தகுதி அடைவார்கள்.
நேர்காணலில் 40 மதிப்பெண்கள் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் 20 மதிப்பெண்கள் பணி சார்ந்த விழிப்புணர்வு, கம்யூனிகேஷன் திறன், கல்வி சாதனைகள் ஆகிய வற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள்.
மொத்தமாக தேர்ச்சி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர் 50% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.isro.gov.in/ என்ற இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 செலுத்தினால் போதும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கிய நிலையில், ஜூலை 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2025
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 16.07.2025
எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.