இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் உயிரிழந்தாக ஈரான் தெரிவித்துள்ளது. தொலைக் காட்சி பேட்டியில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் படை வீரர்கள் விவகாரங்களுக்கான அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்த எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளார். எனினும், வாசிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமை அமைப்பு தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியானதாக தெரிவித்துள்ளது.
இணையம் இல்லாமலே மெசேஜ் அனுப்பலாம்…
புதிய ஆப்!
புதிய ஆப்!
டிவிட்டர் நிறுவனத்தின் மேனாள் சிஇஒ ஜாக் டோர்ஸி, ‘பிட்சாட் (Bitchat) என்ற புதிய மெசேஜிங் ‘ஆப்’-அய் உருவாக்கியுள்ளார். இதற்கு இன்டர்நெட், போன் நம்பர், (அ) சர்வர் எதுவும் தேவையில்லை. புளூடூத் மூலம் peer-to-peer முறையில் இந்த ‘ஆப்’பில் மெசேஜ் அனுப்பலாம். தற்போது இது சோதனை முறையில் உள்ளது. தனியுரிமை off-grid communication நோக்கில் பிட்சாட்டை உருவாக்கியுள்ளதாக ஜாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதலாக
10% வரிவிதிப்பு : டிரம்ப்
10% வரிவிதிப்பு : டிரம்ப்
இந்தியா உட்பட அனைத்து ‘பிரிக்ஸ்’ நாடுகளுக்கும் ஏற்ெகனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.