உலகச் செய்திகள்

viduthalai
3 Min Read

லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை
மீண்டும் வெடித்துச் சிதறியது

மணிலா, ஜூலை 8- இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலைவெடித்துச் சிதறியது வானுயர புகை எழும்பியதால் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டன

இந்தியப் பெருங்கடலின் மிகபெரிய தீவுக்கூட்டங்கள் அடங்கிய நாடு இந்தோனேசியா, “பசிபிக் நெருப்பு வளையம்” (Pacific Ring of Fire) எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு எப்போதும் வெடிக்கும் நிலையில் 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.

இதனால் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் இங்கு அடிக்கடி ஏற்படுகின்றன. இத்தகைய இயற்கை சீற்றங்கள் அப்பகுதி மக்களின் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் 2024 இல் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்தபோது 9 பேர் உயிரிழந்தனர். 10,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.

இந்த எரிமலை மீண்டும் நேற்று (7.7.2025) பசிபிக் நேரப்படி அதிகாலை (இந்திய நேரம் 7.00) வெடித்துள்ளது. ஏற்பட்ட வெடிப்பால் சுமார் 10,000 மீட்டர் (32,800 அடி) முதல் 18 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மற்றும் புகை மண்டலம் வானில் பரவியுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக, அபாய அளவு உச்சபட்சமான நான்காம் நிலைக்கு  உயர்ந்துள்ளது.

எரிமலை பள்ளத்திலிருந்து 8 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஆபத்து மண்டலமாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  அழைத்துச்செல்லப்பட்டனர்.

புளோரஸ் தீவில் உள்ள மவுமேரேவில் உள்ள பிரான்சிஸ்கஸ் சவேரியஸ் சேடா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாலிக்கு செல்லும் பல பன்னாட்டு விமானங் களும், குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்தி ரேலியாவிலிருந்து வரும் விமானங்களும் ரத்து செய் யப்பட்டுள்ளன

இந்த எரிமலைவெடிப்பால் இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. எனினும், பல அடியில் சாம்பல் படிந்துள்ளதால் கனமழை பெய்தால் மழையோடு சாம்பல் சேர்ந்து “லஹார்”  எனப்படும் அபாயகரமான சேற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என புவியியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய அமைச்சர் தற்கொலை

லெனின்கிரேட், ஜூலை 8- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்யாவின் போக்குவரத்து துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் தற்கொலை செய்துகொண்டார்

ஊழல் குற்றச்சாட்டு

ரஷ்ய அமைச்சரவையில் போக்குவரத்துத துறை அமைச்சராக பணியாற்றியவர் ரோமன் ஸ்டாரோவோய்ட். ஊழல் குற்றச்சாட்டு மற்றும் உக்ரைன் தாக்குதல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர். இவரை நேற்று (7.7.2025)  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.

இதைத் தொடர்ந்து ரோமன் வீட்டுக்குச் செல்வதாக கூறி அமைச்சரக அலுவலகத்தில் இருந்து வெளியேறி தனது காரில்  புறப்பட்டார். திடீரென்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் மீது சில ரஷ்ய ஊடகங்கள், குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் அடுக்குமாடி கட்ட ஒதுக்கப்பட்ட அரசு நிதியை தவறான வழியில் செலவு செய்ததாகக் குற்றம் சாட்டி இருந்தன. ரோமன் ஸ்டாரோவோய்ட் இதற்கு முன்பு அதே பகுதியில் முன்பு குர்ஸ்க் ஆளுநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்புடனான சந்திப்புக்குப் பின்
காஸா போர் நிறுத்தத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை

ஜெருசலேம், ஜூலை 8- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்குப் பிறகு, காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டுவதில் முன்னேற்றம் ஏற்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஸாமீது இஸ்ரேல் 2023 அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடங்குகிறது

டிரம்புடன் சந்திப்பு

இதில் 70 ஆயிரம் பாலஸ்தீர்கள் கொல்லப்பட்டனர். காஸாவின் 47 சதவீத நகரம் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபரை சந்திக்க நியூயார்க் சென்றுள்ளார்.

. இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது அதிகாரிகளை தோஹாவுக்கு அனுப்பியுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பேசி வைக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு, காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *