நாலந்தா, ஜூலை 8- பீகாரில் 2 குடும்பத்தின் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் இளம் பெண் உள்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
விளையாட்டில்…
பீகாரின் நாலந்தா மாவட்டத் துக்கு உட்பட்ட தும்ரவன் கிராமத்தில் வசித்து வரும் 2 குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் நேற்று முன்தினம் (6.7.2025) விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதை அறிந்த அவர் களது குடும்பத்தினர் வாக்கு வாதத்தில்ஈடுபட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த 2 குடும்பத்தினரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் அன்னுகுமாரி (வயது 22), ஹிமான்சு குமார் (24) ஆகிய 2 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
2 பேர் மரணம்
துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்ெகனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையிலும் மறியலில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.