சென்னை, ஜூலை.8- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது:-
‘‘கல்வியை மட்டும் பெற்றுவிட்டால் அதை கொண்டு எந்த அளவுக்கு சமூக இழிவுகளை களைந்து புரட்சி செய்யலாம், நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகசிறந்த எடுத்துக்காட்டு திராவிட மணி இரட்டை மலை சீனிவாசனார் ஆவார். அவரின் பிறந்த நாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளை போற்றி நினைவு கூர்கிறேன். அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஆண்டு சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்து இரட்டை மலையாரை கொண்டாடிய, நமது திராவிடமாடல் அரசு என்றும் அவர் ஏற்றிய உரிமைச் சுடரை அணையாமல் பாதுகாக்கும்.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாத்தா ரெட்டமலை சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

Leave a Comment