கந்தர்வகோட்டை, ஜூலை 8 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுகளுக்கான 100 சவாலில் பங்கேற்ற பள்ளிகளுக்கு பாராட்டு உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களும் வழங்கி பாராட்டினர்.