கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.7.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி – ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவது மேலும் விரிவுபடுத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

* ஓய்வு பெற்று 8 மாதங்களாகியும் அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யாத மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட்-ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு: தேர்தல் ஆணையத்தின் செயல்முறை “இந்தியாவின் அரசமைப்பு ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலை குறிக்கிறது, ‘நாம், மக்கள்’ என்பதில் பொதிந்துள்ள மக்கள் இறையாண்மையின் நெறியை மீறுகிறது” என்ற வாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று PUCL தலைவர் கவிதா சிறீவஸ்தவா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

* தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக பாஜகவும், நிதிஷூம் மாற்றி விட்டனர்: காங். கடும் தாக்கு. “பீகாரின் சகோதர, சகோதரிகளே, இனியும் இந்த அநீதியை பொறுத்து கொள்ள முடியாது. உங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்க முடியாது” என ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக ஆர்ஜேடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

* பாளையங்கோட்டை கோயிலில் எஸ்சி இணையர் தங்கள் திருமணத்தை நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி.

தி இந்து:

* 28% வறுமை விகிதம் உள்ள எந்த நாடும் ‘நான்காவது மிகவும் சமமானவர்கள்’ என்று கூற முடியாது: காங்கிரஸ் தாக்கு.

 – குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *