தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி
தொல். திருமாவளவன்
அதிமுக – பாஜக கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் கூட அது பொருந்தாக் கூட்டணியாக உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் மனமொத்து களப்பணி ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றார். பொருந்தாக் கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறுவது நேர் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.