6.7.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேரும் தாக்கரேக்கள்: மகாராட்டிராவில் ஹிந்தி திணிப்பை திரும்பப் பெற்றதால் வெற்றிப் பேரணி 25 ஆண்டுக்கு பின் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ்தாக்கரே. மறைந்த தலைவர் பாலாசாகேப் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சி இருந்த போது, உத்தவ் தாக்கரேவும் ராஜ்தாக்கரேவும் கட்சியின் இரு தூண்களாக திகழ்ந்தனர்.
* ஹிந்தி திணிப்புக்கு எதிராக மகாராட்டிராவிலும் மொழி உரிமைப் போர்: “மொழி உரிமைப் போர் மாநில எல்லைகளை கடந்து மராட்டியத்தில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மராட்டியத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2ஆம் முறையாக பின் வாங்கியுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் பேரணியும், உரை வீச்சும் உற்சாகம் தருகிறது. ஒன்றிணைவோம் வா! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘உங்களுடன் ஸ்டாலின்’: சிதம்பரம் நகராட்சியில் வரும் 15ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட் டத்தை முதலமைச்சர் தொடங்குகிறார்: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நாளை முதல் வீடு வீடாக விண்ணப்பம்: 1 லட்சம் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி பணிவார்: அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவிற்கு நரேந்திர மோடி பணிவுடன் தலை வணங்குவார் என ராகுல் காந்தி விமர்சனம்
* உச்ச நீதிமன்றத்தில் ஓபிசி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற பணியாளர் நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கீட்டைக் கொண்டிருந்தாலும், விதிகளில் ஓபிசி ஒதுக்கீட்டிற்கான எந்த ஏற்பாடும் இல்லை. இப்போது, முதல் முறையாக இது நடந்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்துள்ளார்.
* ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவராக லாலு பிரசாத் மீண்டும் தேர்வு. கட்சியின் தேசியக் குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சில பணக்காரர்களிடம் மட்டுமே செல்வம் குவிகிறது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கவலை
தி இந்து:
* சாமியார் ரவிசங்கர் கைது: சாமியாரின் மருத்துவ கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக்கணக்கில் லஞ்சம்: மடாதிபதி ரவிசங்கர், மேனாள் அய்எப்எஸ் அதிகாரி சஞ்சய் சுக்லா, என்எம்சி மூத்த அதிகாரிகள் உட்பட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தெலங்கானாவின் வாரங்கல்லில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்துக்காக ரூ.4 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்காக பல்வேறு மோசடிகள் நடைபெற்று உள்ளன. இவ்வாறு சிபிஅய் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* எலான் மஸ்க் புதிய கட்சி ‘அமெரிக்கா கட்சி’ தொடக்கம்: உலகின் மிகப் பெரிய பணக்காரர், எலோன் மஸ்க் அதிகாரப்பூர்வமாக புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறார்; அதற்கு ‘தி அமெரிக்க கட்சி’ என்று பெயரிடுகிறார்
– குடந்தை கருணா